ஸ்னாப்டிராகன் சிப்செட், எச்டி+ டிஸ்பிளே, 128ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா முதலிய அம்சங்கள் நிறைந்த Nokia G42 5G ரக அலைபேசியின் புது வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
நோக்கியா ஜி42 5ஜி -யின் அம்சங்கள் (specifications): இந்த சாதனத்தில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி+ (HD+) தொடுதிரை வருகிறது. இதில் 90Hz புதுப்பிப்பு விகிதம் (refresh rate) 450 நிட்ஸ் பீக் (nits peak) அளவு பிரகாசத்துடன் (brightness) வருகிறது. மேலும் அதற்கு கொரில்லா கிளாஸ் 3 (Gorilla Glass 3) திரைக் கவச பாதுகாப்பு கொண்டிருக்கிறது.ஆண்ட்ராய்டு-13 இயங்குதளம் (Android 13 OS) கொண்ட எட்டு தள ஸ்னாப்டிராகன் 480+ 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 480+ 8nm Mobile) சிப்செட் மற்றும் அதனுடன் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) வரைகலை அட்டை (graphics card) வருகிறது. 6 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி நினைவகம் (memory) கொண்டிருக்கிறது.அதுபோலவே 8 ஜிபி மெய்நிகர் ரேம் (8gb virtual RAM) + 256 ஜிபி நினைவகம் கொண்ட ரகமும் வருகிறது.
தற்போது, 4 ஜிபி ரேம் (2 ஜிபி மெய்நிகர் ரேம்) + 128 ஜிபி நினைவகம் கொண்ட புது ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1 TB க்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தும் வகையில் இணை நினைவக ஆதரவு வசதி (microSD Card Support) அளிக்கப்பட்டுள்ளது.கலப்பு இரட்டை சிம் பொருந்தகம் (Hybrid Dual SIM Slot) + நுண் நினைவக பொருந்தகம் (microSD Card Slot) வருகிறது. இந்த சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு போர்ட்ரெய்ட் (AI Portrait) ஆதரவு கொண்ட மூன்று பின்பக்க படக்கருவி (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி ஏஃஎப் (AF) முதன்மை படக்கருவி (main camera) வருகிறது.அதனுடன் 2 எம்பி ஆழ்ந்த படங்கள் எடுக்கும் கருவி (Depth Camera) + 2 எம்பி மேக்ரோ படக்கருவி (Macro Camera) வருகிறது.
இந்த முதன்மை படக்கருவியில் இரவு செயல்வகை 2.0 (Night Mode 2.0) மற்றும் 3டி ஒலி பிடிப்பு (3D Audio Capture) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி ஃஎப்எஃப் (FF) செல்ஃபீ கேமரா வருகிறது. இந்த நோக்கியா ஜி42 5ஜி ரக சாதனத்தில் 20W வேக மின்னேற்ற (fast charging) வசதி கொண்ட 5000mAh மின்கலம் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி 2.0 (USB Type-C 2.0) வகை மின்னேற்றி கொண்டுள்ளது. பக்கவாட்டில் பதிக்கப்பட்ட கைரேகை உணர்வி (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP52 தூசி மற்றும் தெளிப்பு நீர் பாதுகாப்பு (Dust & splash Resistant) கொண்டிருக்கிறது3.5 எம்எம் ஒலி ஜாக் (Audio Jack) உள்ளது. 8.55 mm தடிமன் மற்றும் 193.8 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), இரட்டை 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய தொடர்பு வசதிகள் வருகிறது. சோ பர்பிள் (So Purple) மற்றும் சோ கிரே (So Grey) ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 4ஜிபி + 128ஜிபி ரகத்தின் விலையானது, வெறும் ₹ 9,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 8 முதல் விற்பனைக்கு வர உள்ளது. அமேசான் (Amazon) இணையதளத்தில் வாங்கலாம்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
Leave a Reply