உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின்னடைவு; சிங்கப்பூர் முதலிடம்

சமீபத்திய தரவரிசையின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்தியா ஐந்து இடங்கள் சரிந்து தரவரிசையில் 80 வது இடத்திலிருந்து 85 வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.

17365058756839017337753729582237 Thavvam

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடானது அனைத்து 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளையும் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்துகிறது. இது சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக டிமாடிக் தரவை(Timatic data) அடிப்படையாகக் கொண்டது.

அதன் சமீபத்திய தரவரிசையின்படி, ஒரு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 57 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதனால் இந்தியவானது 85வது இடத்தில் ஈக்வடோரியல் கினியா மற்றும் நைஜருடன் அதன் தரவரிசையைப் பகிர்ந்து கொள்கிறது.

பட்டியலில் யார் முதலிடம்:

உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது, 2025 ஆம் ஆண்டிலும் அதுவே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

அதைத் தொடர்ந்து ஜப்பான் (193 நாடுகள்), பின்லாந்து (192 நாடுகள்), பிரான்ஸ் (192 நாடுகள்), ஜெர்மனி (192 நாடுகள்), இத்தாலி (192 நாடுகள்), தென் கொரியா (192 நாடுகள்), ஸ்பெயின் (192 நாடுகள்), ஆஸ்திரியா (191 நாடுகள்) மற்றும் டென்மார்க் (191 நாடுகள்) உள்ளன.கடந்த பத்தாண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறியீட்டில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது, 2015 முதல் கூடுதலாக 72 இடங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது, இதனால் உலகளவில் 185 இடங்களுக்கு விசா இல்லாமல் 10 வது இடத்திற்கு 32 இடங்கள் முன்னேறியுள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, 2015 மற்றும் 2025 க்கு இடையில் வெனிசுலாவுக்குப் பிறகு அமெரிக்கா இரண்டாவது பெரிய வீழ்ச்சியடைந்துள்ளது, ஏழு இடங்கள் சரிந்துள்ளது என்று ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரண்டாவது டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பே, அமெரிக்க அரசியல் போக்குகள் குறிப்பாக உள்நோக்கமாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மாறிவிட்டன. அமெரிக்க பொருளாதாரத்தின் ஆரோக்கியமானது குடியேற்றம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் நம்பியிருந்தாலும், 2024 ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு அமெரிக்கா தனித்து நிற்க முடியும் மற்றும் நிற்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டது…” என்று வாஷிங்டன் சிந்தனைக் குழுவான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த கூட்டாளியான அன்னி போர்ஷைமர் கூறினார்.

தரவரிசை 2025 – நாடு – விசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகள்

1 சிங்கப்பூர் (Singapore) 195

2 சப்பான் (Japan) 193

3 பின்லாந்து (Finland) 192

4 பிரான்சு (France) 191

4 செர்மனி (Germany) 191

4 இத்தாலி (Italy) 191

4 தென் கொரியா (South Korea) 191

4 ஸ்பெயின் (Spain) 191

4 ஆஸ்திரியா (Austria) 191

5 டென்மார்க் (Denmark) 190

5 அயர்லாந்து (Ireland) 190

5 லக்ஸம்பெர்க் (Luxembourg) 190

5 நெதர்லாந்து (Netherlands) 190

5 நோர்வே (Norway) 190

5 சுவீடன் (Sweden) 190

5 பெல்ஜியம் (Belgium) 190

6 நியூசிலாந்து (New Zealand) 189

6 போர்ச்சுக்கல் (Portugal) 189

6 சுவிட்சர்லாந்து (Switzerland) 189

6 ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 189

6 ஆஸ்திரேலியா (Australia) 189

7 கிரேக்கம் (Greece) 188

7 கனடா (Canada) 188

8 மால்டா (Malta) 187

8 போலந்து (Poland) 187

8 செக் குடியரசு (Czechia) 187

9 அங்கேரி (Hungary) 186

9 எஸ்தோனியா (Estonia) 186

10 அமெரிக்கா (United States) 185

10 லாத்வியா (Latvia) 185

10 ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) 185

10 லிதுவேனியா (Lithuania) 185

யார் கடைசி?

2025 ஆம் ஆண்டில், பாகிஸ்தானும் ஏமனும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் 103 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன, இரண்டும் 33 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத அணுகலைக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ஈராக் (31 நாடுகள்), சிரியா மற்றும் (27 நாடுகள்) மற்றும் ஆப்கானிஸ்தான் (26 நாடுகள்) உள்ளன.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *