சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கள் தலைமுடியை ஏன் கட்டுவதில்லை?

சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கள் தலைமுடியைக் கட்டுவதில்லை ஏன் என்ற கேள்வி ஓரிரு நாட்களாக மிகவும் பேசுபொருளாகியுள்ளது, இப்பதிவில் அது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

Why astronauts like Sunita Williams don’t tie their hair in space
விண்வெளியில் கட்டாத தலைமுடியுடன் சுனிதா வில்லியம்ஸ் (படம் : Breezyscroll)

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது தொடர்பான சமீபத்திய அறிவிப்பின் போது, ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரை “காட்டுத்தனமாக முடி கொண்ட பெண்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நாசாவின் சமீபத்திய பயணத்தில் பல மாதங்களாக விண்வெளியில் சிக்கியிருந்து பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்கள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது, ​​”நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம், உங்களை அழைத்து வர நாங்கள் வருகிறோம். நீங்கள் இவ்வளவு காலம் அங்கு இருந்திருக்கக்கூடாது” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

டிரம்ப் ஒரு புன்னகையுடன் மேலும் பேசுகையில், “காட்டுத்தனமாக முடி கொண்ட பெண்ணை நான் பார்க்கிறேன்- அவருக்கு நல்ல, திடமான தலைமுடி இருக்கிறது. அவருடைய முடியை கிண்டல் செய்ய எந்தக் காரணமும் இல்லை, அவருடைய தலைமுடியைப்பற்றி எந்த விளையாட்டும் இல்லை.” என்று தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கள் குறித்த மீம்ஸ்கள், சமூக ஊடகங்களில் எதிர்வினை அலையைத் தூண்டியிருந்தாலும், விண்வெளி பயணங்களில் அடிக்கடி காணப்படும் ஒரு வினோதமான நிகழ்வையும் இதன் காரணமாக மக்கள் கவனத்தில் கொண்டனர்: குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் போன்ற நீண்ட முடி கொண்டவர்கள், புவியீர்ப்பு அற்ற சூழலில் தங்கள் தலைமுடியை அரிதாகவே பின்னுக்குத் தள்ளுவது ஏன் என்ற கேள்வி பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

விண்வெளியில் மிதக்கும் முடிக்குப் பின்னால் உள்ள அறிவியல்:

விண்கலத்தில் இருந்து சமீபத்தில் நடந்த நேரடி காணொளி உரையாடலில், வில்லியம்ஸ் தனது தலைமுடியை சுதந்திரமாக மிதக்கும்போது அடிக்கடி பின்னுக்குத் தள்ளுவதைக் காண முடிந்தது. இது பல ஆன்லைன் பார்வையாளர்களை அவர் ஏன் அதை கட்டவில்லை என்று கேட்க வைத்தது.

இக்கேள்விக்கான பதில் விண்வெளி வீரர்கள் ஒரு திசை நோக்கிய ஈர்ப்பு விசை இல்லாத சுற்றுப்பாதையில் அனுபவிக்கும் தனித்துவமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் உள்ளது. நுண் ஈர்ப்பு விசையில், முடி பூமியில் இருப்பதை விட மிகவும் வித்தியாசமாக வேறுவிதமாக செயல்படுகிறது.

ஈர்ப்பு விசை அதை கீழே இழுக்காததால், முடி எல்லா திசைகளிலும் சமமாக பரவுகிறது. இதன் பொருளை வேறுவிதமாக கூறுவதென்றால் அது முன்புறம் முகத்தில் விழுந்து பார்வையைத் தடுக்காது அல்லது பூமியில் அது செய்யும் அதே வழியில் வராது, நடைமுறைக்கு அதை கட்ட வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது.

காற்றோட்டம், சௌகரியம் மற்றும் குளிர்ச்சி

வேறு விதமாக சிந்தித்தால் அது பயன்பாட்டுக்கு மிக சௌகரியம் ஆகும். விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் பல்வேறு பணிகளின் போது தலை உறை அல்லது தலைக்கவசத்தை அணிவார்கள். அந்நேரத்தில் முடியை அவிழ்த்து விடுவது உச்சந்தலையைச் சுற்றி சிறந்த முறையில் காற்றோட்ட சுழற்சியை அனுமதிக்கிறது, தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது வீரர்களின் தலையானது நீண்ட நேரத்திற்கு உபகரணங்களால் மூடப்பட்டிருக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

குறைவான சிக்கல் விழுதல், குறைவான தொந்தரவு

பூமியில், ஈர்ப்பு விசை பெரும்பாலும் நீண்ட முடியை சிக்கல் விழ வைக்கிறது, இதனால் அடிக்கடி சீவுதல் கோதுதல் அல்லது கட்டுதல் தேவைப்படுகிறது. நுண் ஈர்ப்பு விசையில், இது பற்றி கவலை அல்ல. முடி சீராக அதனதன் திசையில் மிதக்கிறது மற்றும் அதனால் மிகவும் குறைவாகவே சிக்குகிறது, பராமரிப்பைக் குறைக்கிறது மற்றும் விண்வெளி வீரர்கள் ஆய்வு தொடர்பான முக்கியமான பணிகளில் அதிக நேரம் செலவிட அனுமதிக்கிறது.

அழகியல் – மற்றும் வேடிக்கை

விண்வெளி வீரர்களுக்கு, நுண் ஈர்ப்பு விசையின் அனுபவம் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும், மிதக்கும் முடியும் அதன் ஒரு பகுதியாகும். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் முடி மிதப்பதைப் பார்ப்பது காலத்திற்கும் நினைவுகூரத்தக்க படங்களை எடுக்க உதவுகிறது மற்றும் ஒரு விண்கலத்தில் அதிசய வாழ்க்கையின் அழகை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு விண்வெளி வீரர் கூறிய பிரபலமான கருத்தைப் போல், “தண்ணீர் இல்லை, ஈர்ப்பு இல்லை, எந்த பிரச்சனையும் இல்லை.”

டிரம்பின் கருத்துக்கள் சாதாரணமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தபோதிலும், அது மனிதனின் விண்வெளிக்கு ஏற்ப மனிதன் எதிர்கொள்ளும் மாற்றத்தின் சிறிய ஆனால் ஆர்வமூட்டும் அம்சங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது – தலைமுடி போன்ற சாதாரண ஒரு விடயம் கூட அசாதாரண வழிகளில் நடந்து கொள்ளும் இடமாக விண்வெளி விளங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்