Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
இந்தியாவில் Samsung Galaxy M56 5G அறிமுகப்படுத்தப்பட்டது
Samsung நிறுவனம், தான் ஏற்கனவே அறிவித்தபடி, Galaxy M56 5G smartphoneஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அலைபேசி 6.7-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது Exynos 1480 புரொசசர் மற்றும் நீராவி அறை குளிர்விக்கும் அமைப்பு (wapor chamber cooling) மூலம் இயக்கப்படுகிறது, இது இதன் முந்தைய ரகத்தை விட 33% பெரியது.
இந்த கைபேசி OIS உடன் 50MP பிரதான கேமரா, முன் மற்றும் பின்புற கேமராக்களில் 10-பிட் HDR பதிவை ஆதரிக்கிறது, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது One UI 7 உடன், Android 15 ஐ இயக்குகிறது, மேலும் நிறுவனம் 6 முறைகள் வரை OS மேம்படுத்தல்கள்(os updates) மற்றும் அலைபேசிக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு (security updates) உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த கைபேசி முன் மற்றும் பின்புறத்தில் Corning Gorilla Glass Victus+ பாதுகாப்பைக் கொண்டுள்ளது, மேலும் உலோக கேமரா அலங்காரத்தையும் கொண்டுள்ளது.இந்த கைபேசி வெறும் 7.2mm தடிமன் கொண்டது, இது Galaxy M55 ஐ விட 30% மெலிதானது, மேலும் 180 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று Samsung கூறுகிறது.
இந்த தொலைபேசியில் மிகுவேக மின்னேற்றம் (superfast charging 2.0) தொழில்நுட்பத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh மின்கலம் உள்ளது, ஆனால் பெட்டியில் சார்ஜர் இல்லை.
6.7-இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O HDR டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், 1200 nits வரை உயர் பிரகாச பயன்முறை (HBM), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு, AMD Xclipse 530 GPU உடன் 2.75GHz ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 செயலி, 8GB LPDDR5X ரேம், 128GB / 256GB UFS 3.1 உள் சேமிப்பு, Android 15 Samsung One UI 7, இரட்டை சிம் (நானோ + நானோ)f/1.8 அபெசருடன் கூடிய 50MP பின்புற கேமரா, OIS, 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா , f/2.2 துளையுடன், 2MP மேக்ரோ சென்சார் f/2.4 துளையுடன், LED ஃபிளாஷ், f/2.2 துளையுடன் கூடிய 12MP முன் கேமரா,இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், USB டைப்-C
பரிமாணங்கள்:162.0 x 77.3 x 7.2 மிமீ; எடை: 180 கிராம்5G SA / NSA, 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3, GPS + GLONASS, USB Type-C, NFC45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh (வழக்கமான) மின்கலம்.
Samsung Galaxy M56 5G வெளிர் பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது, மேலும் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 27,999 ஆகும், மேலும் இது 8GB + 256GB மாடலின் விலை ரூ. 30,999 ஆகும்.இந்த அலைபேசி ஏப்ரல் 23 முதல் Amazon.in, மற்றும் Samsung India ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் 3000 உடனடி தள்ளுபடி
அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த சாம்சங் இந்தியாவின் MX வணிக இயக்குநர் அக்ஷய் எஸ் ராவ் கூறியதாவது:
“அர்த்தமுள்ள புதுமைகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, கேலக்ஸி M56 5G-ஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் – இது தோற்றம், செயல்படு காலம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையாகும். இது அதன் பிரிவில் மிகவும் மெல்லிய கைபேசியாகும், ஆனால் நீடித்து உழைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, முன் மற்றும் பின் இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பைக் கொண்டுள்ளது, இது இதுவரை இல்லாத கடினமான M தொடர் தொலைபேசியாக அமைகிறது. நீங்கள் முன் HDR கேமரா மூலம் நினைவுகளைப் படம்பிடித்தாலும் அல்லது மேம்பட்ட AI எடிட்டிங் கருவிகள் மூலம் படைப்பு சாத்தியங்களை ஆராய்ந்தாலும், கேலக்ஸி M56 5G, அதன் சக்திவாய்ந்த அம்சங்களுடன், ஸ்மார்ட்போன் அனுபவத்தை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது“ என்றார்.
எமது வவலையொளிப்பக்கம் : thavvammedia/YouTube
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்