Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
இலங்கையின் விடுதலைநாளை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் விதமாக காவல்துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்த பெருமளவில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காவலர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் செயல்முறைகளை மேற்கொண்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்களுக்கு ஆளானதோடு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus