இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்புடைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்புடைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

75 ஆண்டுகாலமாக காப்பாற்றப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கு ஏற்ப மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வை தொடர்ந்து இன்று முற்பகல் 11 மணியளவில் மற்ற தேர்வுகள் திருகோணமலையில் நடைபெறுகிறது. தலைவர் தேர்வின்போது பொதுச் சபையில் பங்கேற்றவர்களே இந்நிகழ்விலும் பங்கேற்பர்.

மத்திய செயற்குழு கூட்டம்:

இதற்கு முன் ஏற்கனவே இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினுடைய கூட்டம் அதன் முன்னாள் தலைவர் மாவை. சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. பின்னரே செயலாளர், துணைச் செயலாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 33 பேர் மத்திய குழு உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்படுவர். சென்ற 19ம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு ஞானமுத்து சிறீநேசனை செயலாளராக நான் முன்மொழிந்ததுகுறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு காரணம் உள்ளது.

2019 இறுதியில் நடைபெற்ற தேசிய மாநாடு சமயத்தில், என்னை பொதுச்செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்திருந்தார். ஆனால் அதனை யாரும் வழிமொழியவில்லை. ஏற்கனவே இருந்தவர்களையே தலைவர், செயலாளர் பதவிகளில் அமர்த்த அனைவரும் விரும்பியதால் நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.

பொதுச்செயலாளராக சிறீநேசன்:

image 12 Thavvam

image credits: Eelanadu

தற்போது எனக்கு எதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் செயலாளராக வர முயல்வதால் தலைவர் தேர்வில் சிறீதரனை ஆதரித்ததாக கூறுகின்றனர். அதனை முறியடிக்கவே நான் தலைவர் தேர்வுக்கு முன்பே ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்திருந்தேன். இன்றைய செயலாளர் தேர்விலும் மட்டக்களப்பில் இருந்து ஞானமுத்து சிறீநேசனை தேர்வு செய்யவே அங்கிருந்தவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இந்த முடிவு இன்று(27.01.24) மத்திய குழு கூட்டத்திற்கும் செல்லவுள்ளது. அதனால் போட்டியின்றி ஞானமுத்து சிறீநேசனே பொதுச்செயலாளராக தேர்வாவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

thavvam Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழால் இணைவோம்

Follow us on social media