Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை நேற்று (01/02/24) சந்தித்தார்.
பிரித்தானிய தூதரின் அழைப்பின் பேரில், இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்புமரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்காக சிவஞானம் சிறீதரனுக்கு, ஆண்ட்ரூ பேட்ரிக் வாழ்த்து தெரிவித்தார். அத்தோடு, அவரது அடுத்தகட்ட செயல் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.மேலும், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஈழத்தமிழர்களின் அரசியல் களத்தில் தான் கொண்டிருக்கும் கரிசனையையும் ஆண்ட்ரூ பேட்ரிக் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus