கட்டுநாயக்க – கொழும்பு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகன ஓட்டுனர் விபத்து நேரிட்ட நாளன்று மதியம் தனது வாட்ஸப்பில் இட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராகம போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுனர் பிரபாத் எரங்க தனது வாட்ஸ்அப் மூலம் “நாளைய தினத்துக்குள் என் பெயரில் ஒரு நல்ல புகைப்படமும், படத்துக்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று கூறுங்கள், அதை நான் படிக்க ஆசைப்படுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
ஓட்டுனரின் வாக்குமூலம்:
கொழும்பின் வடக்கு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் பிரபாத் எரங்க காவலர்களின் விசாரணையின் போது விபத்து தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் அடங்கிய குழுவினர் விரைவில் கொழும்பை அடைய முயற்சித்ததாகவும் அப்போது சனத் நிஷந்த காலில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் ஓட்டுனர் குறிப்பிட்டுள்ளார். அந்நேரத்தில் வாகனம் 160 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தாக்கப்பட்ட வாகனம்:
சென்ற மாதம் 29ஆம் தேதி தங்கொட்டுவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்க அமைச்சர் பயணித்தபோது மாதவிலப் பிரதேசத்தில் அமைச்சர் சனத் சென்ற வாகனம் வேறொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. எதிர் வந்த மகிழுந்தில் பயணித்தவர்கள் அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply