ஹான் ஜாங்-ஹீ மரணம்: சாம்சங்கின் இணை தலைமை நிர்வாக அதிகாரியின்(co CEO) இறப்புக்கான காரணம், நிகர மதிப்பு மற்றும் பிற விவரங்கள்

தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி(co CEO) ஹான் ஜாங்-ஹீ இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது.

Han Jong Hee 1742869226023 1742869226295 Thavvam
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ காலமானார் (Bloomberg)

அவருக்கு வயது 63. உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் நுகர்வோர் மின்னணு மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவை ஹான் மேற்பார்வையிட்டார், அதே நேரத்தில் மற்றொரு இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜுன் யங்-ஹியூன் சிப் வணிகப்பிரிவை பொறுப்பேற்று நடத்தினார். ஹானின் பதவிக்கு அடுத்ததாக வரவுள்ள நபர் யாரென்று சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.

இன்ஹா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு ஹான் ஜாங்-ஹீ 1988 இல் சாம்சங்கில் சேர்ந்தார். அவர் 2011 முதல் 2013 வரை தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் விஷுவல் டிஸ்ப்ளே வணிகத்தின் தலைவராகவும் இருந்தார்.

63 வயதான அவர் பின்னர் 2021 இல் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 2017 இல் விஷுவல் டிஸ்ப்ளே வணிகத்தை ஏற்றுக்கொண்டார். கொரியாவின் ஜூங்ஆங் டெய்லி செய்திகளின் படி, நிறுவனத்தின் தொலைக்காட்சி வணிகத்தின் வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு அவர் முக்கிய பங்காற்றி பெருமை சேர்த்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

ஹான் ஜாங்-ஹீயின் மரணத்திற்கான காரணம் என்ன?

ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, ஹான் ஜாங்-ஹீ மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக சாம்சங் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

ஹான் ஜாங்-ஹீயின் நிகர மதிப்பு

நவம்பர் 30, 2024 நிலவரப்படி, ஹானின் நிகர மதிப்பு தோராயமாக $971,291 ஆக இருந்தது. அவரது வருடாந்திர இழப்பீட்டுத் (annual compensation)தொகுப்பு ₩6.90 பில்லியன் (தோராயமாக $4.83 மில்லியன்) என்று வலைத்தளம் simplywall.st தரவை மேற்கோள் காட்டி analyticsinsight.net செய்தி வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. ஹானும் அந்நிறுவனத்தின் வாரிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

கடந்த வாரம் சாம்சங்கின் பங்குதாரர் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார், ஏனெனில் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் மோசமாகச் செயல்படும் தொழில்நுட்ப பங்குகளில் ஒன்றாக இருந்தது.

“முதலாவதாக, சமீப காலமாக நம் நிறுவன பங்குகளின் செயல்திறன் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டில், வேகமாக வளர்ந்து வரும் AI குறைக்கடத்தி (AI semiconductors)சந்தைக்கு எங்கள் நிறுவனம் போதுமான அளவு ஈடுகொடுக்கத் தவறிவிட்டது,” என்று ஹான் கூறினார்.

புதன்கிழமை சாம்சங்கின் புதிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வெளியீட்டு நிகழ்வில் அவர் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்