Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், அவரை குடும்பத்தினருடன் சேர்க்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (29.01.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்சாந்தனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பெரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகவும், சாந்தனின் உடல் நிலை கருதியும் இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் கொண்டும் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டு இலங்கைக்கு திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ ஆவண செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும் அதே வழக்கோடு சம்பந்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த மற்றவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசரமான வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus