Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
வானியல் தரவுகள் தரும் சனிப்பெயர்ச்சி
==================================
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள் – அறிவுடைமை 423)
சனிப்பெயர்ச்சி 2025 வது ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறதா? அல்லது 2026 மார்ச் மாதம் நடக்கிறதா? என்று பலர் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 ஆண்டு, மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி கிரகம் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதாக சொல்கிறது. அதேசமயம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 வது ஆண்டில், மார்ச் 29 தேதி, சனி கிரகம் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதாக சொல்கிறது.
பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கு இடையேயான வித்தியாசமே இந்த சனிப்பெயர்ச்சிக்கான இடைவெளி உண்டாகக் காரணம்.வாக்கியபடி சனி கிரக பெயர்ச்சி நடந்து விட்டதா? அல்லது திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடந்து விட்டதா? என்ற குழப்பம் வரும்பொழுதெல்லாம், வானமண்டலம் நமக்கு புரியும்படி பதில் சொல்லிவிடுகிறது. அதன்படி தற்கால தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவான வானியல் கிரக அசைவுகளை காட்டும் செயலிகள் (Apps) மூலம் நாம் அறிவது யாதெனில், மார்ச் மாதம் 29ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு சனி கிரகம் மீன ராசியை தொடுகிறது (கீழே இருக்கும் படத்தை பார்க்கவும்) என்ற காரணத்தினால், சனி கிரகம் மீன ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே வானத்தில் நாம் காணும் கிரகங்களின் அசைவின்படி 2025 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29 ஆம் தேதி அன்றே சனி கிரக பெயர்ச்சி ஆகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள நீங்களே இது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இந்த வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கு இடையே ஆன பலவித சர்ச்சைகளுக்கு உள்ளே நான் வரவில்லை. எனக்கு தெரிந்த செயலிகள் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தப் பதிவை செய்திருக்கிறேன். இந்த பதிவின் மூலம் சனி பெயர்ச்சி எந்த தேதி நடக்கிறது என்பதற்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
நமது கணிதங்கள் தவறாகலாம், ஆனால் பிரபஞ்சம் என்றும். தவறு செய்வதில்லை! வணக்கம்.
மணிகண்டன் பாரதிதாசன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து…
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்