Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
POCO நிறுவனம் ஏற்கனவே உறுதியளித்தபடி, அந்நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான POCO C71 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அலைபேசியானது 6.88-இன்ச் HD+ 120Hz தொடு திரையைக் கொண்டுள்ளது, இதில் TÜV குறைந்த நீல ஒளி(TÜV low blue light), ஃப்ளிக்கர் இல்லாத (flicker free) மற்றும் சர்க்காடியன் சான்றிதழ்கள்(circadian certifications) உள்ளன. மேலும் ஈரமான கைகள் அல்லது லேசான மழையில் கூட தொடுதிரையானது துல்லியமாக இயங்குவதனை உறுதி செய்யும்(Wet Touch Display ) தொழில்நுட்பமும் உள்ளது.
இது Unisoc T7250 Octa-Core processorஆல் இயக்கப்படுகிறது, இது 6GB வரை RAM மற்றும் 6GB வரை மெய்நிகர் RAM (virtual RAM)உடன் உள்ளது. POCO C71 32MP பின்புற படக்கருவியுடன் ஒரு இரண்டாம் நிலை படக்கருவி மற்றும் 8MP முன்புற படக்கருவியைக் கொண்டுள்ளது.
இந்த அலைபேசியின் வடிவமைப்பானது ஒரு தட்டையான சட்டகம் மற்றும் பகட்டன தோற்றம் தரும் தங்க வளையம் மற்றும் தனித்துவமான ஸ்பிளிட்-கிரிட் வடிவமைப்பைக் கொண்ட பின்புறமானது படக்கருவியுடன் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இது Android 15 உடன் வருகிறது. POCO நிறுவனம் இந்த கருவிக்கு 2 வருட OS புதுப்பிப்புகளையும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்பையும் (security updates) உறுதியளிக்கிறது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஈரடுக்கு வைஃபை (dual band Wi-Fi) ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும். இந்த போன் பவர் பிளாக், டெசர்ட் கோல்ட் மற்றும் கூல் ப்ளூ வண்ணங்களில் வருகிறது, மேலும் 15W வேகமான மின்னேற்றத்திற்கான ஆதரவுடன் 5200mAh மின்கலத்தைக் கொண்டுள்ளது.
6.88-இன்ச் (1640 x 720 பிக்சல்கள்) 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய HD+ IPS LCD திரை, 240Hz தொடு மாதிரி வீதம், TÜV ரைன்லேண்ட்-சான்றளிக்கப்பட்ட கண் பாதுகாப்பு, 600 nits உச்ச பிரகாசம்1.8 GHz ஆக்டா-கோர் UNISOC T7250 12nm செயலி Mali-G57 MP1 GPU உடன்4GB / 6GB LPDDR4X RAM, 64GB / 128GB eMMC 5.1 உள் சேமிப்பு, microSD உடன் 2TB வரை விரிவாக்கக்கூடிய நினைவகம், Android 15இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ SD)f/1.75 துளையுடன் கூடிய 32MP பின்புற கேமரா, இரண்டாம் நிலை கேமரா, LED ஃபிளாஷ்f/2.0 துளையுடன் கூடிய 8MP முன்புற கேமரா 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை பதிவாங்கியும் உள்ளது.
பரிமாணங்கள்: 171.9×77.8x 8.26mm; எடை: 193 கிராம்தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பு (IP52)இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac 2.4GHz/5GHz, புளூடூத் 5.2,GPS | GLONASS | Galileo | BDS (B1C மட்டும்), USB Type- C போர்ட்15W மின்னேற்றம் கொண்ட 5200mAh மின்கலம் கொண்டுள்ளது.
POCO C71 4GB + 64GB ரகத்தின் விலை ரூ. 6,499 மற்றும் 6GB + 128GB ரகத்தின் விலை ரூ. 7,499. இந்த போன் ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.
POCO C71 ஐ வெறும் ரூ. 5,999 விலையில், ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகளுடன் கிடைக்கிறது.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த POCO நிறுவனத்தின் இந்திய தலைவர் ஹிமான்ஷு டாண்டன் கூறியதாவது:
“புதிய POCO C71 ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் எல்லைகளைத் தாண்டிய, சக்தி, செயல்திறன் மற்றும் புதுமைகளை உள்ளடக்கிய ஒரு சாதனமாகும். தொழில்துறையில் முன்னணி வகிக்கும் 120Hz டிஸ்ப்ளே, 12GB டைனமிக் ரேமின் சக்தி மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 ஆகியவற்றுடன் – அனைத்தும் தோற்கடிக்க முடியாத ஒரு விலையில், C71 எங்கள் பயனர்கள் ஒரு ஸ்மார்ட்போனில் தேடும் அனைத்து வசதிகளையும் துல்லியமாக வழங்குகிறது! அதில் சமரசங்கள் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்