பிரதமர் நரேந்திர மோடி நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ்க்கு கடிதம்: இந்தியாவிற்கு வர அழைப்பு

அழைப்புக் கடிதம்:

பிரதமர் நரேந்திர மோடி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு கடிதம் எழுதி, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பயணம் செய்த விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக சுற்றுப்பாதையில் இருந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் கலனில்(spaceX capsule) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டதால், பிரதமர் மோடி நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

Sunita Williams meets prime minister Narendra modi
பிரதமர் நரேந்திர மோடி நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸை வாஷிங்டனில் உள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் சந்திக்கிறார். (கோப்பு படம் – Hindustan times)

பூமி திரும்புதல்:

ஒன்பது மாதங்கள் சுற்றுப்பாதையில் சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்புவதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்பயணத்திற்காக இன்று (செவ்வாய் 18-03-2025) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் கலனில் புறப்பட்ட செய்தி பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸுக்கு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

டிராகன் என்ற பெயர் கொண்ட சிறுகலனுள் (Dragon capsule) அமர்ந்திருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்(Sunita Williams and Butch Wilmore), மற்ற இரண்டு குழு உறுப்பினர்களுடன், செவ்வாய்க்கிழமை நியூயார்க் நேரப்படி அதிகாலை 1:05 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அந்தக் கலனானது பூமியை நோக்கி விண்வெளியில் பயணித்து, வளிமண்டலத்தின் வழி ஊடுருவி, இறுதியில் வளியெதிர் குடைகளின் (parachute) உதவியுடன் புவியை நெருங்கும் என்றும் பின்னர் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் புளோரிடா கடற்கரையில் கீழே தரையில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, .

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்