itel Zeno 10 இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம்
thavvam
ஐடெல் (itel) நிறுவனம் தனது புதிய Zeno தொடரில் அந்நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனான Zeno 10 ஐ சனவரி 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.
டீஸர் படம் 5,xxx என்ற விலையைக் காட்டுவதால் இது ₹6000 ரூபாய்க்குள் அலைபேசி வாங்க விரும்பும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது அந்நிறுவனத்தின் A50 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு வருகிறது.
அந்நிறுவனம் இதன் அம்சங்களாக Zenithal வடிவமைப்பு, பின்புறத்தில் அலை வடிவத்துடன் இரண்டு வண்ணங்கள், கூடுதல் 8GB விர்ச்சுவல் RAM உடன் 4GB RAM, 64GB சேமிப்பு, 6.6″ HD+ IPS LCD திரையுடன் டைனமிக் பேண்ட் (dynamic band) ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வலைபேசியானது போர்ட்ரெய்ட் மோட், HDR மோட், ப்ரோ மோட், பனோர்மா, ஸ்லோ மோஷன் மற்றும் பலவற்றுடன் 8MP AI டூயல் ரியர் கேமராக்கள், நாட்ச் உள்ளே 5MP முன்புற கேமரா மற்றும் USB Type-C சார்ஜிங் திறன்களுக்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
Leave a Reply