Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
தீ விபத்தில்:
சீனாவில் ஒரு பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சீனாவில் உள்ள ஜியாங்சி யுசுய் மாவட்டத்தில் சின்யு நகரின் தெருவில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் மேல் தளங்கள் மற்றும் அப்பகுதி முழுவதுமே புகை மூட்டமாகிவிட்டது..
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மக்களை காப்பாற்ற போராடினர். ஆனால் அதற்குள் வருந்தத்தக்க வகையில் 25 பேர் விபத்தில் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையானwebsite ,Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus