கரப்பான் பூச்சி பால் (cockroach milk) என்றால் என்ன, ஆராய்ச்சியாளர்கள் அதை ஏன் ‘சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கிறார்கள்?

சர்வதேச படிகவியல் ஒன்றியத்தின்(International Union of Crystallography) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு காலத்தில் அதிகளவு கலோரி அடர்த்தியான பாலூட்டியின் பாலாகக் கருதப்பட்ட எருமைப் பாலின் ஆற்றலை விட இந்த கரப்பான் பூச்சி பால் (cockroach milk) மூன்று மடங்கு ஆற்றலை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சூப்பர் ஃபுட்கள்(superfoods) அவற்றின் விதிவிலக்கான ஊட்டச்சத்து மதிப்புக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, பெர்ரி பழங்கள், கொட்டைகள் மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகள் தொடர்ந்து வரும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இருப்பினும், அவற்றிற்கு ஒரு ஆச்சரியமான புதிய போட்டியாளர் உருவாகியுள்ளது – அதுதான் கரப்பான் பூச்சி பால் ஆகும்.

இந்த யோசனை விரும்பத்தகாததாகத் தோன்றினாலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் ஊட்டச்சத்து அடர்த்தியான இயற்கை சேர்மங்களில் ஒன்றாக இந்த பொருளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால் கரப்பான் பூச்சி பால் உண்மையில் பசும்பால் போன்ற பால் அல்ல – இது கரப்பான் பூச்சியின் சந்ததியினரின் வயிற்றுக்குள் படிகமாக்கும் ஒரு மஞ்சள் நிற திரவம் ஆகும். பசிபிக் வண்டு கரப்பான் பூச்சியிலிருந்து (டிப்ளோப்டெரா பங்க்டேட்டா – Diploptera punctata) பெறப்பட்ட இந்த பால் போன்ற சுரப்பு புரதங்கள், வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் நல்ல சர்க்கரைகளால் நிரம்பியுள்ளது.

சர்வதேச படிகவியல் ஒன்றியத்தின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு காலத்தில் அதிக கலோரி அடர்த்தியான பாலூட்டிகளின் பாலாகக் கருதப்பட்ட எருமைப் பாலின் ஆற்றலை விட இது மூன்று மடங்கு ஆற்றலை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

“படிக வடிவத்தில் உணவைச் சேமிப்பது அதிக செறிவுள்ள உணவைச் சேமிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவை தேவைப்படும்போது ஊட்டச்சத்துக்களை சீரான கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளியிடுவதற்கான ஒரு சாதகமான வழிமுறையையும் இதன்மூலம் வழங்குகிறது.

உயிரியல் ரீதியாக வளர்க்கப்படும் புரதப் படிகங்களில் இவற்றின் மூலக்கூறு அமைப்பைப் புரிந்துகொள்வது, வெப்ப இயக்கவியல் (படிக பொதி – crystal packing) மற்றும் இயக்கவியல் (படிக மற்றும் கரைசல் நிலைகளுக்கு இடையிலான சமநிலை – equilibrium between crystalline and solution states) ஆகியவற்றின் கொள்கைகள் உயிரியலில் எவ்வாறு பரிணாம ரீதியான நன்மையை வழங்குகின்றன என்பதைப் சிறப்பாக புரிந்து கொள்ள அனுமதிக்கிறது, ”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனை தேவைக்கேற்ப உற்பத்தி செய்வதற்கான நடைமுறை சவால்களை சமாளித்தால், நிலையான ஊட்டச்சத்திற்கான மூலமாக கரப்பான் பால் எதிர்காலத்தில் நல்ல மாற்றாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Cockroach milk
கரப்பான் பூச்சி பால் (cockroach milk) என்பது ஒரு படிக வடிவ பொருளாகும்

கரப்பான் பால் (cockroach milk) அடுத்த சூப்பர்ஃபுட் ஆகுமா?

செரிமானம் மற்றும் பிற சுகாதார நன்மைகளில் இது மற்ற மாற்று புரதங்களுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது என்று நாம் மேற்கொண்ட பொதுவான இணையத்தேடலில் கிட்டிய கருத்துக்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

கரப்பான் பால் அதன் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் சேர்மங்களின் கலவை காரணமாக நடைமுறை வாழ்வில் பயன்படுத்தப்படும் மற்ற புரத மூலங்களிலிருந்து தனித்து நிற்கிறது.

பசிபிக் வண்டு கரப்பான் பூச்சியால் உற்பத்தி செய்யப்படும் பால் போன்ற அதனுடைய இந்த புரத படிகங்கள், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் தன்னுள் கொண்டிருக்கின்றன மற்றும் செரிமானத்தின் போது படிப்படியாகவே ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன, நிலையான ஆற்றல் விநியோகத்தை செயல்படுத்துகின்றன; எனவே இது உட்கொண்டதும் விரைவாக உறிஞ்சப்படும் தாவர அல்லது பால் புரதங்களிலிருந்து ஒரு முக்கிய வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.

எருமைப் பாலை விட மூன்று மடங்கு கலோரி அடர்த்தி மற்றும் பசுவின் பாலை விட நான்கு மடங்கு அதிகமாக இருப்பதால், கரப்பான் பூச்சி பாலில் புரதங்கள், கொழுப்புகள், கிளைகோசைலேட்டட் சர்க்கரைகள் மற்றும் செல் பழுது மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை மற்றும் விநியோக விகிதம் போன்ற திறன் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் இதை ஒரு சூப்பர்ஃபுட் (superfood) என்று கருதுகின்றனர். பால் பண்ணையைப் போலல்லாமல், கரப்பான் பூச்சி வளர்ப்பிற்கு குறைந்தபட்ச நிலம் மற்றும் நீரே தேவைப்படுகிறது. அதன் லாக்டோஸ் இல்லாத மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பண்புகள் , உணவுப் பாதுகாப்பு சட்ட நடைமுறைகள் மற்றும் உற்பத்தி சவால்கள் இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன

இருப்பினும், இதனை ஒரு உணவுப்பொருளாக ஏற்றுக்கொள்ள பலர் எதிர்கொள்ளக்கூடிய உளவியல் ரீதியான தடையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பாலை உணவு மூலமாகக் கருதுவது கொஞ்சம் வினோதமானது. இந்த வழக்கத்திற்கு மாறான புரத மூலமானது இன்றைய நவீன உலகில் ஊட்டச்சத்து மற்றும் நிலைத்தன்மை பற்றிய நமது கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்த வகை பால் இன்னும் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானதா?

தற்போதுவரை, ​​கரப்பான் பூச்சி பால் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படவில்லை. அதன் பாதுகாப்பு, குறிப்பாக சாத்தியமான ஒவ்வாமை மற்றும் மாசுபடுத்தும் அபாயங்கள் குறித்து ஆராய்ச்சிகள் இன்னும் விரிவாக மேற்கொள்ளப்பட்ட வேண்டும். அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுவரை போதுமான ஆராய்ச்சி இல்லை, இது ஒரு ஆபத்தான தேர்வாக அமையலாம், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அல்லது மட்டி மற்றும் மீன் ஒவ்வாமை உள்ளவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இது அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Cockroach Milk

இதைப் பாதுகாப்பாக மாற்ற, விஞ்ஞானிகள் புதுமையான தீர்வுகளை ஆராய்ந்து வருகின்றனர்:

ஆய்வக அடிப்படையிலான தொகுப்பு:

பூச்சிகளை அறுவடை செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க, கரப்பான் பூச்சி பாலில் காணப்படும் அதே புரதங்களை உற்பத்தி செய்ய ஈஸ்ட் அல்லது நுண்ணுயிரிகளின் மரபணு பொறியியல் மூலம் மாற்றியமைத்து மருத்துவத்துறையில் செயற்கையாக இன்சுலின் தயாரிப்பதைப்போன்ற தொழில்நுட்ப மாதிரியில் இதனை எளிமையாக உருவாக்கலாம்.

பாதுகாப்பு சோதனைகள்:

இதனால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் நீண்டகால பயன்பாட்டில் மருத்துவ சுகாதார விளைவுகளை மதிப்பிடுவதற்கான விரிவான மனித ஆய்வுகள்.

கடுமையான தரக் கட்டுப்பாடு:

தூய்மையை உறுதி செய்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளையும் ரசாயன மூலக்கூறுகளையும் நீக்குதல்.

இந்தக் கருத்து மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் இருந்தாலும் கூட, நடைமுறையில் பெரியளவில் குறிப்பிடத்தக்க தடைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கரப்பான் பூச்சி பால் என்ற பெயர் வினோதமாகத் தோன்றினாலும், ஊட்டச்சத்து நிறைந்த விருப்பமாக, உணவுத் தேர்வாக அமையும் அதன் சாத்தியக்கூறு மறுக்க முடியாதது.

இருப்பினும், பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சிக்கல்களை நாம் கவனிக்கும் வரையில், இது ஒரு நடைமுறை பயன்பாட்டிற்கான உணவு ஆதாரம் என்பதை விட இது ஒரு ஆர்வமூட்டும் அறிவியல் ஆய்வு என்பதாகவே உள்ளது.

“எச்சரிக்கை: இந்தக் கட்டுரை பொது களம் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களிடமிருந்து வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு உணவுப் பழக்கத்தையும் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் உங்கள் சுகாதார ஆலோசகர் மற்றும் மருத்துவர்களை அணுகவும்.”

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்