Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
பிரித்தானியா முழுவதும் ஆய்வுக்காக ஒன்பது செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்களை நிறுவும் நோக்கத்தில் பிரித்தானிய அரசு 100 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4000 கோடி, இந்திய பணமதிப்பில் சுமார் ரூ.1000 கோடி) செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கல்வி, சட்ட அமலாக்கம் மற்றும் பிற படைப்புத் தொழில்களில் AI இன் சீரான பயன்பாட்டை ஆய்வு செய்யும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தின் விளைவாக ஏற்படும் நன்மை தீமைகளை நிர்வகிப்பதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வு
செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காக பொது சேவைகள் மற்றும் பொருளாதாரத்தை சிறப்பானதாக மாற்ற உதவும் மற்றும் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று பிரித்தானியாவின் அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மைக்கேல் டோனெல்லன்(Michelle Donnellan) தெரிவித்துள்ளார்.மேலும் பாதுகாப்பாக செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக பிரித்தானியாவை மாற்ற வழி வகுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில்,செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பிற்கான உலகின் முதல் நிறுவனத்தை பிரித்தானியா துவங்கியது மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கான உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத்தின் அபாயங்கள்
மேலும் இந்த உச்சி மாநாட்டில், AI தொழில்நுட்பத்தின் அபாயங்களை ஒப்புக்கொள்ள 25க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவை உலகின் செயற்கை நுண்ணறிவின் மையமாக மாற்றும் இலக்குடன் பிரித்தானிய அரசு செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களுள் மைக்ரோசாப்ட்(Microsoft),கூகுள்(Google) மற்றும்அமேசான் (Amazon) போன்ற சில நிறுவனங்கள் பிரித்தானிய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus