Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
தகவல்களையும் புகைப்படங்களையும் திரித்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதன் மூலம் ஒரு தனி நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ, அமைப்பையோ கேலி செய்யும் மோசமான மனநிலையில் இப்போது பலரையும் காணமுடிகிறது. அதிலும் தேர்தல் நெருங்கிவிட்டால் சமூக வலைதளங்களில் இத்தகைய படங்களுக்கு பஞ்சமே இருக்காது.
அவ்வகையில் தற்போது கே. டி. ராகவன் காலில் பாஜக தலைவர் அண்ணாமலை விழுவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுகிறது.
அதனை பரிசோதித்தபோது, உண்மையில் அது சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேரூர் மற்றும் சிரவை ஆதீனங்களை சந்தித்து ஆசி பெற்றபோது, சிரவை ஆதீனம் அவர்களின் காலில் விழுந்த புகைப்படத்தை திரித்து ராகவன் காலில் விழுவதை போன்று சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போலியான படம் பகிரப்பட்ட முகநூல் பதிவு ஒன்றில், “அடுத்த தடவை கொஞ்சம் நல்லா எடிட் பண்ணுங்க” என்று சிலர் நக்கலாக கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்