இணைய வழி பாதுகாப்பு யோசனை கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்பதனால் இதில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவது முற்றிலும் பொருத்தம் இல்லாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்ய தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வழி பாதுகாப்பு யோசனை குறித்து முன்னர் அமெரிக்க தூதர் ஜூலி சங் வெளியிட்ட கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இணைய வழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதர் லெவன் ட்ழகரியன் புவிசார் அரசியல் விவாதத்தை தொடங்கியுள்ளார்.
இணைய வழி பாதுகாப்பு சட்டமூலம்:
இந்நிலையில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலம் தொடர்பான விடயங்களையும், உள்நாட்டு அரசியல் மற்றும் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு சக்திகளிடையே இருந்து வரும் அனைத்து கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகளையும் ரஷ்யா கவனித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரின் முந்தைய கருத்து:
இந்த நிறைவேற்றம் சனநாயக மதிப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும், மின்னணு பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் மற்றும் இலங்கைக்கு தேவையான பொருளாதார வளர்ச்சியின் மதிப்பை குறைக்கும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரலை நசுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus
Leave a Reply