சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) கையேந்தும் மாலத்தீவு அதிபர் முய்ஸூ

image 44 Thavvam

இந்தியாவுடனான மோதல் போக்கினால் மாலத்தீவின் பொருளாதாரம் திவாலாகி உள்ளதாகவும் இதனால் அந்நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு நாட்டின் வருமானம் என்பது பெரும்பாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத்துறையை சார்ந்தே இருக்கிறது.
அந்நாட்டின் கடற்கரைகளுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர். மாலத்தீவுக்கு வந்து செல்லும் பயணிகளில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய விழுக்காடு ஆகும்.

உரசல்
இந்த சூழலில் கடந்த ஆண்டு முதல் இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மாலத்தீவில் கடந்த ஆண்டு அந்நாட்டு அதிபர் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் இந்திய ஆதரவு அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோல்வியுற்றார். பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு அவரை வீழ்த்தி வெற்றி பெற்று அதிபரானார்.
இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதோடு சீன ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.

image 44 Thavvam

இவர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் போதே தான் வென்றால் “மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன்” என்று பிரசாரம் செய்து வெற்றி பெற்றார்.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம்

அதேபோல் அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி அறிவித்தார். இது விவாதத்தை கிளப்பி இருந்தது. இத்தகு சூழலில் இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

image 45 Thavvam

மாலத்தீவின் சுற்றுலாத் துறையை முடக்கும் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சையான கருத்துகளையும் தெரிவித்தனர்.

இது இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவுச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடுங் கோபமடைந்த இந்தியர்கள் மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை ரத்து செய்தனர்.

திவால்
இதனால் மாலத்தீவின் வருமானம் விரைவாக வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலையில் தற்போது மாலத்தீவு திவாலாகி உள்ளதாக அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டை திவால் சூழ்நிலையில் இருந்து மீட்க பொருளாதார ரீதியிலான கடன் உதவிகளை வழங்குமாறு மாலத்தீவு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *