Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மசார் இ சரீஃப் என்ற நகரில் இன்று (18/02/24) மாலை 4.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்ட பதிவில் நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் காரணமாக பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus