இல்லினாய்ஸ், எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், புவியின் மேற்பரப்பிலிருந்து 700 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் மிகப்பரந்த ஒரு நீர்த் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலத்தடி நீராதாரம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து பெருங்கடல்களையும் விட மும்மடங்கு பெரிதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து கீழே சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்நீர் பரப்பு, பூமியின் புவியியல் ஆராய்ச்சிகள் மற்றும் நீர் சுழற்சியை வேறு சில வழிகளிலும் உணர இந்த ஆராய்ச்சி புதிய வழிகளை திறந்துள்ளது.
பூமியில் நீரின் தோற்றத்தை ஆராயும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வின் போது இவ்விடயம் கண்டறியப் பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரிங்வுடைட் எனப்படும் ஒரு கனிமத்தில் மறைந்துள்ள கடல் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.
இக்கண்டுபிடிப்பு பூமியில் இவ்வளவு காலம், நீரின் தோற்றத்தை நாம் உணரும் விதத்தை புரட்டிப்போடுவதாக அமையக்கூடும். இந்த நிலத்தடிப் பெருங்கடலானது, அனைத்து மேற்பரப்புப் பெருங்கடல்களையயும் ஒருங்கிணைத்த அளவை விட மூன்று மடங்கு (x3) அதிகமாகும்.
இக்கண்டுபிடிப்பு பூமியின் நீர் சுழற்சி தொடர்பான புதிய கோட்பாட்டை முன்மொழிகிறது. ஒருதரப்பு விஞ்ஞானிகள் வால்மீன் தாக்கங்கள் மூலம் நீர் தோன்றியதாக நம்பினாலும் கூட, இக்கண்டுபிடிப்பு மூலம் சில விஞ்ஞானிகள் பூமியின் பெருங்கடல்கள், பூமியின் ஆழத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய, இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஸ்டீவன் ஜேக்கப்சன் பேசிய ஒரு நேர்காணலில், ‘தற்போது பூமியில் உள்ள நீர் பூமியின் ஆழத்தில் உள்ளே இருந்து வந்ததற்கான வலுவான ஆதாரத்தை இது காட்டுகிறது’ என்றார்.
அமெரிக்கா முழுவதிலும், ஆராய்ச்சியாளர்கள் 2,000 நில அதிர்வு வரைபடங்களை பயன்படுத்தி ஒரு கடலையே கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் சுமார் 500 நில நடுக்கங்களிலிருந்து நிலஅதிர்வு அலைகளைப் பார்த்ததாக கூறியுள்ளனர்.
இவ்வலைகள் பூமியின் உட்புறத்தில் பயணித்த போது அவை தம் வேகத்தைக் குறைத்ததாகவும், புவியின் ஆழத்தில் கீழே உள்ள பாறைகளில் தண்ணீர் இருப்பதை இது காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானி ஜேக்கப்சன், இந்த நீர்த் தேக்கத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினார். இந்த நீர் ஆழத்தில் இல்லாமல் இருந்திருந்தால், பூமியில் உள்ள அனைத்து நீரும் புவிமேற்பரப்பில் இருந்திருக்கும், அதனால் நாம் மேற்பரப்பில் மலை சிகரங்களை மட்டுமே பார்த்திருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், விஞ்ஞானிகள் உலகெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதலாக நில அதிர்வு தரவுகளை சேகரித்தனர். இந்த கண்டுபிடிப்பு, மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் பூமியின் நீர் சுழற்சி பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இது பூமியின் அடிப்படை செயல்முறைகளில் ஒன்றைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளை வழங்குவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்