குரங்கு அம்மைக்கு தடுப்பூசி (Mpox vaccine) உள்ளதா, அது எப்படி வேலை செய்கிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

சமீபத்திய Mpox தொற்றுப் பரவல் உலகளாவிய மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்வதேச எல்லைகளில், போக்குவரத்து தொடர்புகளால் பரவும் நோயை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

குரங்கு அம்மைக்கான தடுப்பூசிகள் (Mpox vaccine ) உருவாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கான பதில் ஆம், தடுப்பூசி உள்ளது.

2022 ஆம் ஆண்டில் முதன் முறையாக Mpox க்காக உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகள் MVA-BN தடுப்பூசியை இதற்காக பயன்படுத்த ஒப்புதல் அளித்தன.

image 19 Thavvam

குரங்கு அம்மைக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் என்ன?

ஒரு Mpox தொற்றுக்கு எதிராகப் மனிதர்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பூசிகள் உள்ளன, ஆனால் தற்போது கிடைக்கக்கூடிய இந்த தடுப்பூசிகள் குறிப்பாக குரங்கு அம்மை வைரஸை குறிவைத்து உருவாக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது எப்படி சாத்தியம்?

குரங்கு அம்மை வைரஸானது, ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்(Orthopoxvirus) எனப்படும் வைரஸ் வகையைச் சேர்ந்தது, இவை அனைத்தும் சிக்கலான டிஎன்ஏ வைரஸ்கள் ஆகும். இன்னும் சிலவற்றுடன், இந்த இனத்தில் உள்ள வைரஸ்களில் பெரியம்மை(smallpox), மாட்டு அம்மை (cowpox) வைரஸ் மற்றும் வேக்சினியா வைரஸ் (vaccinia virus) ஆகியவையும் அடங்கும்.

இந்த இனத்தைச் சேர்ந்த வைரஸ்கள் தங்கள் மரபணுக்களில் பெரும் பங்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளன, இந்த பண்பு இந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை Mpox தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது.

Mpox தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

Mpox க்கு எதிராக பாதுகாக்கும் தடுப்பூசிகள் குறுக்கு-வினைத்திறன் (cross-reactivity) எனப்படும் ஒரு நிகழ்வை நம்பியுள்ளன. வெவ்வேறு ஆன்டிஜென்கள் – வெவ்வேறு வகையான வைரஸ்கள் – நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பொறுத்தவரை ஒன்றைப் போலவே தோன்றும் போது குறுக்கு-வினைத்திறன் நிகழ்கிறது.

இதை கற்பனை செய்து பாருங்கள்: ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்திலிருந்து வரும் வைரஸ்கள் கட்டமைப்பு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், ஒரு நபர் வேரியோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், எடுத்துக்காட்டாக, வைரஸுக்கு எதிராக அவர்களின் செல்கள் உருவாக்கும் ஆன்டிபாடிகள் குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் செயல்பட்டு அவர்களைப் பாதுகாக்கும்.

ஆர்த்தோபாக்ஸ் வைரஸிற்கான ஆன்டிபாடிகளுக்கு இடையேயான குறுக்கு-வினைத்திறன், பெரியம்மை நோயை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை, Mpox நோய்த்தொற்றுகளை எதிர்த்து வேலை செய்ய அனுமதிக்கிறது.

ஏற்கனவே பெரியம்மைக்கு எதிராக தடுப்பூசி போட்டிருந்தால், அவர்களுக்கு குரங்கு அம்மை பாதிக்காதா?

தற்போது வரை அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பல தசாப்த கால உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்கும் முயற்சிக்குப் பிறகு 1980 இல் பெரியம்மை முற்றிலும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1980 களுக்குப் பிறகு, இந்த நோய்க்கு எதிரான வெகுஜன நோய்த்தடுப்பு நிறுத்தப்பட்டது, இதனால் சில ஆராய்ச்சியாளர்கள் குரங்கு அம்மை வைரஸ் உட்பட ஆர்த்தோபாக்ஸ் வைரஸின் பிற வடிவங்களுக்கு மக்கள் தற்போது எளிதில் பாதிக்கப்படுவது அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர். உலகளாவிய பெரியம்மை தடுப்பூசி திட்டம் முடிவடைந்த பிறகு பிறந்தவர்கள் குரங்கு அம்மைக்கான எதிர்ப்பு சக்தியை (antibodies) குறைந்த அளவிலேயே கொண்டுள்ளனர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mpox Vaccine

முந்தைய 2022-2023 Mpox உலகளாவிய பெருந்தொற்று பரவலில் 18-44 வயதுடைய ஆண்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் முந்தைய பெரியம்மை தடுப்பூசி ஒரு நபர் Mpox நோயால் பாதிக்கப்பட்டாமல் இருக்கும் அளவுக்கு முழுமையாக பாதுகாக்காது.

பெரியம்மை தடுப்பூசியானது குரங்குப் அம்மை வைரஸ் தொற்றைத் தடுப்பதில் 85% பயனுள்ளதாக இருப்பதாக முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஆனால் பெரியம்மை தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு Mpox இன் லேசான தொற்றுகள் இருப்பதாகத் தெரிகிறது.

நம்மிடம் தற்போது என்ன தடுப்பூசிகள் உள்ளன?

ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, EU/EEA, ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் கனடா முழுவதும் Mpox க்கு எதிராக பயன்படுத்த ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது MVA-BN தடுப்பூசியாகும், இது “மாற்றியமைக்கப்பட்ட வேக்சினியா அங்காரா-பவேரியன் நோர்டிக்” (Modified Vaccinia Ankara-Bavarian Nordic) என்று அழைக்கப்படுகிறது.

இத்தடுப்பூசியானது, ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ்களில் ஒன்றான வேக்சினியா வைரஸை பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் கொண்டுள்ளது. இது குரங்கு அம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

மாற்றியமைக்கப்பட்ட வேக்சினியா அங்காரா தடுப்பூசி(Modified Vaccinia Ankara vaccine) 1950 மற்றும் 60 களில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது மற்றும் முதலில் பெரியம்மை தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

அதன் தற்போதைய வடிவம், MVA-BN, டேனிஷ் பயோடெக் நிறுவனமான Bavarian Nordic ஆல் உருவாக்கப்பட்டது மற்றும் 2010 முதல் உற்பத்தியில் உள்ளது.

இது பொதுவாக 28 நாட்கள் இடைவெளியில், இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் வெவ்வேறு ஒழுங்குமுறை நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட, குரங்கு அம்மைக்கு எதிரான மற்ற இரண்டு தடுப்பூசிகளை பட்டியலிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு Mpox தொற்று பரவிய போது, ​​ஜப்பான் பெரியம்மை தடுப்பூசி LC16 (smallpox vaccine LC16)ஐ அங்கீகரித்தது, மேலும் பெரியம்மை, குரங்கு அம்மை மற்றும் பிற ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு ரஷ்யா OrthopoxVac உரிமம் அளித்தது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்துள்ள பகுதிகளில், உயிருள்ள வேக்சினியா வைரஸைக் கொண்டிருக்கும் ACAM2000 என்ற தடுப்பூசி, மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசிகள் ஆய்வில் உள்ளனவா?

ஆம். ஒரு உதாரணம் ஒரு புதிய mRNA தடுப்பூசி – BNT166 – குறிப்பாக குரங்கு அம்மை வைரஸில் உள்ள ஆன்டிஜென்களை குறிவைக்கிறது, இது இப்போது மருத்துவ மதிப்பீட்டில் (under clinical evaluation) உள்ளது

COVID-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து உலகளாவிய தடுப்பூசி வழங்கும் முயற்சியிலிருந்து mRNA தடுப்பூசிகள் பற்றி பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

தற்போது, ​​WHO வெகுஜன தடுப்பூசி திட்டத்தை பரிந்துரைக்கவில்லை.

ஆபத்தில் உள்ளவர்கள் அல்லது வைரஸுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே தடுப்பூசிக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Editor Thavvam

Related Posts

100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய தயாரிப்பு தொலைத்தொடர்பு சாதனங்கள்

“உலகளாவிய அளவில் கடுமையான போட்டி இருந்தபோதிலும், எங்கள் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளன” என்று தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் உறுப்பினர் (தொழில்நுட்பம்) மது அரோரா கூறினார். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு…

பூமிக்கு திரும்பும் நாள் தெரியாமல் 50 நாட்களாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் மற்ற எட்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ‘நல்ல உற்சாகத்துடன்’ இருப்பதாகவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐம்பது நாட்களைக் கடந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் (ladakh)

லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் (ladakh)

HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

HONOR Magic V3, HONOR MagicPad 2 மற்றும் HONOR MagicBook Art 14 ஆகியவை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் IFA 2024 இல் உலக அளவில் விற்பனைக்கு வரும்

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்ற உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்க்கி

‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

‘இது 1,000 தங்கப்பதக்கங்களை விட மேலானது’: சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்த வினேஷ் போகத்

‘இது 1,000 தங்கப்பதக்கங்களை விட மேலானது’: சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்த வினேஷ் போகத்