நாம் தமிழர் கட்சி விட்டு விலகிய காளியம்மாள்…X வலைப்பதிவு

நாம் தமிழர் கட்சி விட்டு விலகிய காளியம்மாள்…
X வலைப்பதிவு

பின்னாவருமாறு
வலைப்பதிவு செய்த பின்னார் நாம் தமிழர்கட்சியை விட்டு விலகினார் காளியம்மாள்…

வேறு கட்சி பற்றி எதுவும் சொல்லவில்லை தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கான உழைப்பதாக பதிவு

காளியம்மாள் பிரகாசன்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
தேதி : 24.02.2025
இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன்…கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது, பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை, கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன், என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த, களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.எனக்கான நெருக்கடிகள் நிறைய நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்,எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்!
என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்…..
நன்றி,வணக்கம், நாம் தமிழர்!

image 1 Thavvam
image 2 Thavvam

நாகபட்டினத்தில் சமூகப் போராளியாக செயல்பட்டு, கசா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். அந்த சமயத்தில், அவர் நாம் தமிழர் கட்சியுடன் அறிமுகமானார். பின்னர், கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவர் அந்தக் கட்சியில் சேர்ந்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் அவர், 14 டிசம்பர் 2019 அன்று இந்த பதவிக்கு முன்னேறினார். அவ்வப்போது, 05 பிப்ரவரி 2019 அன்று நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பதவியையும் பெற்றார்.

இவர் பிறந்த இடம் நாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா. தற்போதைய முகவரி சென்னை, தமிழ்நாடு. இவை அவரது ஆரம்ப வாழ்க்கையின் முக்கிய குறிப்புகள் ஆகும். சமூக சேவையில் ஈடுபட்டவர், அவருடைய பணிகள் மகளிர் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பலன்கள் சார்ந்த முறையில் முன்னேறியுள்ளன.

அவருடைய குடும்ப விவரங்களில், இவர் தனது துணைவராக பிரகாஷ் என்பவரை கொண்டுள்ளார். சமூக மற்றும் அரசியல் விடயங்களில் தீவிரமாக ஈடுபட்டவர், சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வருவதை மிகுந்த உறுதியாக உணர்ந்து செயற்படுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக, மகளிர் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல திட்டங்களை முன்னெடுத்து, இதுவரை நல்ல சாதனைகள் செய்து வருகிறார். பொதுவாக, அவர் ஒரு திறமையான மற்றும் உழைக்கும் பெண்ணாக மகளிர் பிரச்சினைகள் மற்றும் சமூக நன்மை தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அவரின் தொண்டு பணிகள், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் முன்னேறியுள்ள மகளிரின் சமூகத்தில் சாதனை படைத்துள்ளார்.

தேர்தல்தொகுதிகட்சிமுடிவுபெற்ற வாக்குகள்எதிர்த்துப் போட்டியிட்டவர்எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சிஎதிர்த்துப் போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்வட சென்னை மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிதோல்வி60,515 (6.33%)கலாநிதி வீராசாமிதிமுக5,90,986 (61.85%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்பூம்புகார் சட்டமன்றத் தொகுதிநாம் தமிழர் கட்சிதோல்வி14,823 (7.16%)நிவேதா எம். முருகன்திமுக96,102 (46.40%)

பலர் முறை காளியம்மாள் கட்சியை விட்டு விலகுவதாக பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது.ஆனாவ் இம்முறை அவர் விலகிவிட்டார்.
நேற்று சீமானிடம் கேட்ட பொழுது இது அவர் தனிப்பட்ட முடிவு.. எனவும் நாம் தமிழர் கட்சி கங்கு
இது களை யுதிரகாலம் எனவும் கூறினார்

MORE INFO

காளியம்மாள் #NAAMTAMILAR #TAMILnews